Friday, 30 December 2016

ஜெயராஜ் மரணமும் சசிகுமாரும்!



ஜெயராஜ் மரணத்தில் ஏன் இத்தனை மர்மங்கள்? 

அந்த மரணத்தால் மிகப்பெரிய பலனை அனுபவிப்பது சசிதான் எனும்போது எல்லோர் சந்தேகமும் சசிகுமார் மீது பாய்வது இயற்கைதானே?

ஜெயராஜ். ஆரம்பத்திலிருந்தே ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்து, மர்மமாகவே இறந்தும்போனார்!

ஜெயராஜ் ஒரு நாடகக் கலைஞருக்கு மகனாகப் பிறந்தவர்!

நன்றாகப் படித்து ஒரு நல்ல பதவியில் அமரவேண்டும் என்ற லட்சியம் அப்பாவின் கட்டாயத்தால் நாடகக் கொட்டகையில் முடிந்தது!

நடிக்கவந்த இடத்தில், தன் அழகாலும் திறமையாலும் நிலா என்ற பெயர்பெற்ற ஸ்திரீபார்ட்டோடு அதிகம் ஜோடி சேர்ந்து நடித்ததில், ஏறத்தாழ அவரது கணவராகவே மக்கள் மனதில் இடம் பெற்றார்!

சட்டென்று ஷோபி என்ற இன்னொரு வேற்றுமொழி நடிகையோடு மனமொத்துப்போய் நிம்மதியாக நாடகக்கொட்டகையை மறந்து வாழ்ந்துவந்தார்!

காலம் இப்படி ஒரு அமைதியான கதையை வேடிக்கை பார்க்காதே!
நிலா, நாடகத்தில் நடிக்கும்போதே, ஷேர் மார்க்கெட்டில் ஈடுபாடு கொண்டவர்.

தம்பிதுரை என்பவர் நடத்திவந்த கம்பெனியில் தயாநிதி என்பவர் இயக்குனராக இருந்தார்! தம்பிதுரை மறைவுக்குப்பின் சில உள்ளடி வேலைகள் செய்து தானே நிர்வாக இயக்குனராகி அந்த கம்பெனியை ன் வசமாக்கினார்!

அதில் கவுரவ இயக்குனராக இருந்த நிலா, ஒரு கட்டத்தில் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தார்!

தயாநிதி, நிலா, இருவருமே, தத்தம் கம்பெனிகளை திறமையாக நிர்வகித்து, அகில இந்தியக் கம்பெனிகள் தங்களுக்குப் போட்டியாக வராமல் பார்த்துக்கொண்டார்கள்!


நிலா இருக்கும்வரை, தயாநிதிக்கு எந்தஒரு மேஜர் காண்ட்ராக்ட்டும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்!

இந்த நிலையில்தான் ஜெயராஜ் வாழ்வில் அந்தத் திருப்பம் வந்தது!
நிலா, தன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள ஜெயராஜுக்குத் தூது அனுப்பினார்!

கம்பெனியிலோ, வியாபாரத்திலோ சுத்தமாக அவருக்கு ஈடுபாடே இல்லை.
ஷோபியோடு நிம்மதியாக வாழ்வதே அவர் விருப்பமாக இருந்தது!

ஆனால் நிலாவின் பிடிவாதம் ஊர் அறிந்தது!
சாம பேத தண்டப் பிரயோகத்தில் ஜெயராஜை இழுத்துவந்தார்.

விருப்பமே இல்லாது வந்த ஜெயராஜ் சீக்கிரத்திலே அதிகார சுகம் தந்த போதையில், நிலாவுக்கு எதிராகவே உள்கட்சி அரசியல் செய்யவும் துணிந்தார்!

எல்லோருக்கும் வரும் மரணம் நிலாவுக்கும் வர, சிலபல சில்லறை வேலைகளோடு, அந்தக் கம்பெனிக்கு நிர்வாகி ஆனார் ஜெயா!

தயாநிதி, ஜெயா இருவரும் மாறிமாறி தமிழக காண்ட்ராக்ட்களை அள்ள, தேசியக் கம்பெனிகள் மிக்ஸர் சாப்பிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்தன!

நிலாவின் மேலிருந்த ஆத்திரம் ஜெயாவை அகங்காரம், ஆணவம், அகந்தை என வேறுதளத்துக்கு இட்டுச்செல்ல,
கம்பெனியில் அனைத்து இயக்குனர்களையும் தன் காலில் விழும் அடிமைகளாகவே நடத்திவந்தார்!

அவர்களும் வருமானம் வரும்போது தன்மானமாவது வெங்காயமாவது என்று அடிமை வேஷத்தையே திறம்படப் போட்டு, காண்ட்ராக்ட், கமிஷன் என்று கொடிகட்டிப் பறந்தார்கள்!

இந்தக் கதையில் அடுத்த திருப்பம்!

நிலாவால் ஜெயாவை வேவுபார்க்க அனுப்பப்பட்ட வேலைக்காரன் ட்ரைவர் சசிகுமார், சிறிது சிறிதாக ஜெயாவின் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு அவரது உடன்பிறவா சகோதரன் ஆனான்!


எல்லோரையும் அடிமையாய் நடத்தும் ஜெயராஜ், சசியிடம் எதனாலோ கட்டுப்பட்டுப் போனார்!

சசியும், அவர் உறவுக்கூட்டமும் ஜெயராஜை முழுமையாக அடிமைப்படுத்தியது!

சட்டவிரோத நடவடிக்கைகளில் சற்றும் தயக்கமே இல்லாமல் ஈடுபட்டு அந்தக்கும்பல் பணத்தை அள்ளியது!

அம்பானி, அதானிக்கே சவால்விடும் அளவில் அந்தப் பிச்சைக்கார கும்பல் தமிழகத்தைக் கூறுபோட்டு வளைத்தது!

ஜெயக்குமாரின் அக்கா குடும்பம் ஜெயராஜை  அண்டாமல் அந்தக் கும்பல் சாமர்த்தியமாக வேலிபோட்டுப் பிரித்தது!

யாருமற்ற தான் யாருக்காக சொத்து சேர்க்கிறோம் என்பதே தெரியாமல், உற்சாகமாக இந்த கும்பலோடு கொள்ளையில் ஈடுபட்டு இருமுறை சிறை சென்றபோதும், ஜெயா, தன் கம்பெனியின் கோடிக்கணக்கான பங்குதாரர்களின் நலனை எண்ணாமல், இந்தக் கும்பலின் கூடாரத்தில் சந்தோஷமாக, இயல்பாக இணைந்துகொண்டார்!

கொஞ்சம் கொஞ்சமாக சசிகுமார் நியமிப்பவரே கம்பெனியின் இயக்குனர்கள், அதிகாரிகள் ஆகமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டபோதும், ஒரு டிரைவரின் காலை நக்கிப் பிழைக்க அந்த டைரக்டர்களும் பழகிப்போனார்கள்!

இந்த நிலையில், ஊழ்வினை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்காய் உருவெடுக்க, அதன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராது என்பது வெளிப்படையானது!

அப்போது, யாருக்கும் புரியாத மர்மமாய் ஜெயராஜ் காய்ச்சல் என்ற பெயரில் மருத்துவமனைக்கு ஒரு நள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டார்!

அதுதான் ஜெயராஜை உலகம் கடைசியாகப் பார்த்தது!

எழுபத்தைந்து நாள்!
சசியின் மொத்தக் கட்டுப்பாட்டில் ஜெயாவுக்கு மருத்துவம் நடப்பதாய் நாடகம் நடந்தது!

அவரது அக்கா மகனான தீபன் உட்பட யாருமே பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது!

கேள்வி கேட்கவேண்டிய மத்தியக் கட்டுப்பாட்டு நிறுவனமோ, சசியின் கண்ணசைவில் ஆடியது!

அதன் பிரதிநிதிகள் சசி சொல்வதை திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் ஆனார்கள்!

எழுபத்தைந்து நாள் அவகாசத்தில் ஜெயராஜின் கைரேகைகள் தேவையான அளவு  உருட்டப்பட்டன!

சசியின் பேரங்கள் முடிந்தபின் ஜெயராஜின் இருப்பு தேவையற்றதானது!
மேலும் ஒரு நாடகத்தில், உச்சகட்டக் காட்சி அரங்கேற, ஜெயராஜ்மாரடைப்பால்”  காலமானார்!

மத்தியப் பிரதிநிதி மிளகாய் நாயுடு நாள் முழுக்கக் கூட இருந்து எல்லா ஏற்பாட்டையும் சுமுகமாக முடித்துக்கொடுக்க,

பிணம் அனாதையாய் மருத்துவமனையில் கிடக்க, இங்கே, கம்பெனிக்கு டைரக்டர்கள் நியமனம் அர்த்தராத்திரியில் அரங்கேறியது!

இந்த உலகத்தில் எங்குமே நடந்திராதவகையில் நள்ளிரவில், கொஞ்சமும் மனஉறுத்தல் இன்றிப் பிணத்தின் மேல் பதவியேற்றன அடிமைகள்!

அவசரம் அவசரமாக ஜெயராஜ் சசி கைகாட்டி இடத்தில் எரியூட்டப்பட, உண்மைகள் அவரோடே எரிந்துபோயின!

கம்பனியை வசப்படுத்தியதோடு, ஜெயராஜின் அப்பா சம்பாதித்த சொத்து உட்பட, எல்லாவற்றையும் கேள்வி கேட்பாரின்றி தன் வசப்படுத்தியது சசியின் கொள்ளைக்கூட்டம்!

ஜெயராஜின் அக்கா மகன் தீபனும் பத்திரிக்கைப் பேட்டி கொடுப்பதோடு தன் கடமை முடிந்ததென்று ஒதுக்கிக்கொள்ள,
கம்பெனியின் கோடிக்கணக்கான பங்குதாரர்களை மயிருக்கு சமானமாக மதித்து, அவர்களை சசிக்கு அடிமை ஆக்கியது காலில் விழுந்து புரண்டு சுகம் கண்ட அடிமைக்கூட்டம்!

இழவு விழுந்து முப்பதுநாள் கூட முடியாத நிலையில், கோலாகலமாக விழா எடுத்து சசியை நிர்வாக இயக்குனர் ஆக்கியது அடிமைக்கூட்டம்!

போதாக்குறைக்கு, ஜெயராஜுக்கு தொழில் கற்றுக்கொடுத்ததே அந்த ட்ரைவர்தான் என்றும்,
கம்பெனியைக் கட்டிக்காத்ததே சசிதான் என்றும்,
ஜெயா வெறும் அறிவுகெட்ட முண்டம் என்றும்
கூசாமல் ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்து தங்கள் விசுவாசத்தை நிரூபித்தது அடிமைக்கூட்டம்!

காசு மட்டுமே ஊடக அறமாகக்கொண்ட ஊடகங்களும் கல்லாவை நிரப்பிக்கொண்டு ஆமாம்சாமி பாட்டுப்பாடின!

கேள்வி கேட்கவேண்டிய மத்திய நிர்வாகமோ, தனக்குத் தலையாட்டும் முப்பத்துஒன்பது மற்றும் பதினோரு அடிமைகளும், கண்டைனர் கணக்கில் பணமும் போதுமென்று ஒதுங்கிக்கொண்டது!

நீதிமன்றமே முன்வந்து ஜெயா மரணம் குறித்து ஏன் அக்கா மகன் தீபன் வழக்குத் தொடரவில்லை என்று ஆதங்கமாய்க் கேட்டது!
சசியின் பதவியேற்புக் கோலாகலங்களில் அந்தக் கேள்வியும் காற்றில் கரைந்தது!

அவ்வளவுதான்!

சுபம்!

பி கு:

இந்தக்கதையை படித்துப்பார்த்த என் பதின்ம வயது மகன் கேட்ட கேள்விகள்!

1.      ஜெயா உறுதியானவர், திறமையானவர் என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயலும் உனக்கு, ஆரம்பம் முதலே, அடுத்தவர் இழுத்த இழுப்புக்குத்தானே வளைந்து கொடுத்திருக்கிறார் என்பது புரியவில்லையா?

2.      கோடிக்கணக்கான பங்குதாரர்கள் ஜெயராஜ் மீது உயிரையே வைத்திருப்பதாகவும், அவர் சிறை சென்றபோதே தீக்குளித்ததாகவும் கதை சொல்கிறாயே, இன்று அவர் மரணத்துக்கு அவர்கள் யாருமே ஏன் வீதியில் இறங்கிப்போராடவில்லை?


3.      தயாநிதிக்கு உண்மையில் மக்கள்மேல் அக்கறை இருந்திருக்குமானால், இந்த அவலத்தைத் தடுக்க ஏன் எந்த முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்?

4.      மாற்றுக்கம்பெனியை கைப்பற்றத் துடிக்கிறார் என்ற கெட்டபெயர் வரும் என்ற பயம் மட்டுமே காரணமா? இல்லை சசியோடு ஏதும் கள்ள உடன்படிக்கையா?

5.      ஜெயா இருக்கும்போதே ஆட்டம்போட்ட இந்தக் கொள்ளைக்கூட்டம் இனி ஆடப்போகும் ஆட்டத்தின் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் கடமை அவருக்கு இல்லையா?

6.      தமிழக மக்களுக்கு இனி விமோசனமே இல்லையா?



வழக்கம்போல் காற்றில் கரைந்தன கேள்விகள்!

Wednesday, 28 December 2016

புதிய முதல்வரின் புத்தாண்டு பேட்டி!



தமிழகத்தில், இந்தியாவில், உலகில், பிரபஞ்சத்தில், இருக்கும், இறந்த, பிறக்கப்போகும் அனைத்து உயிர்களும் வாசலில் நின்று தலைமையேற்றுக் காப்பாற்றச் சொல்லி கதறிக்கொண்டிருக்கும் எங்கள் சின்னத்தாய் இதுவரை பேட்டி ஏதும் தரவில்லை என்ற மனக்குறையைப் போக்க, ஒரு 
புத்தாண்டு நேர்காணல்!

நிருபர்: வணக்கம் மேடம்!

யோவ்! என்ன மரியாதையில்லாம.. என்றொரு குரல் கேட்க, சுதாரித்து,

“வணக்கம் சின்னம்மா அவர்களே!”

தினகரன் செல்லமாய் ஓங்கி அறைந்தபடி,
 'மாண்புமிகு' உங்க அப்பனாடா சொல்லுவான்!

“விடு பாஸ்! தம்பி இன்னும் ட்யூன் ஆகல! நம்ம பாண்டே கிட்ட அனுப்பு! ரெண்டுநாள்ள சரியாயிடும்!
கேளு தம்பி!”

நிரு: தை பிறந்தால் தமிழக முதல்வர் ஆகப்போகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

சிஅ: எனக்கு இந்த அரசியல், பதவி இதிலெல்லாம் ஆசையே இல்லை! மக்கள் நலனுக்காகத்தான் விருப்பமே இல்லாமல் இதை ஏற்கிறேன்!

நிரு: தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்!



சிஅ: அட, நான் மன்னார்குடி மக்களைச் சொன்னேன்! என்னை நம்பி டெம்போ எல்லாம் வெச்சு வந்திருக்காங்க!

நிரு: ஆனால் அவர்களை ஜெயலலிதா தள்ளி வைத்திருந்தார்களே!

சிஅ: நானும் அக்கா வழியில் தள்ளித்தான் வெச்சிருக்கிறேன். பாருங்க, இளவரசி எவ்வளவு தள்ளி உட்கார்ந்திருக்காங்கன்னு! மத்தவங்ககூட மாடிலதான் இருக்காங்க!

நிரு: அரசியலில் உங்களுக்கு அனுபவம் இல்லையே, எப்படி சமாளிக்கப் போறீங்க?

சிஅ: யார் சொன்னது? இப்பக்கூட நான் அக்கா உட்கார்ந்த சேரில் உட்கார்ந்துதான் உங்களோட பேசிக்கிட்டிருக்கிறேன்! இது எவ்வளவு பெரிய ராஜதந்திரம்! நீங்க விகடன் படிக்கறதில்லையா?

நிரு: ஏங்க, அதில் என்னங்க ராஜதந்திரம்?  அக்கா எப்ப சாவாங்க, திண்ணை எப்ப காலியாகும்ன்னு பார்த்தமாதிரி இருக்கு!

ஏய், இன்னா.. ன்னு வளர்மதி அக்கா பாய்ந்துவர, பதறி ஓட எழுந்த நிருபரை அடக்கி உட்காரச் சொல்கிறார் சிஅ.



சிஅ: தம்பி, உங்களுக்கு பெட்டி குடுக்க விட்டுப்போச்சுபோல! போகும்போது வாங்கிக்கலாம்! அத மனசுல வெச்சுக்கிட்டு கேள்வி கேளுங்க!

நிரு: இன்னைக்கு அவசரத்துல ரூம்மேட் ஜட்டியைப் போட்டுக்கிட்டு வந்துட்டேன். அப்ப நான்தான் அவனோட வாரிசா? என் பெண்டாட்டி பழைய புடவையெல்லாம் வேலைக்காரிக்குதான் கொடுப்பா! அப்போ அவ என் பெண்டாட்டி ஆயிடுவாளா?

ஒரு லாஜிக் வேண்டாமா மேடம்?


சிஅ: அக்கா தூங்கப்போகும்போது டிவி ரிமோட்டை என் கையில் கொடுத்துட்டுப் போவாங்க! அவ்வளவு ஏன், இன்னைக்கு என்ன டிஃபன் செய்யட்டும்ன்னு சமையல்காரி கேட்டா, சசிகிட்ட கேளுன்னு சொல்லுவாங்க! இதிலிருந்து என்ன தெரியுது?

நிரு: நீங்க ஜாமம் வரைக்கும் தூங்கமாட்டீங்க, நல்லா சாப்பிடுவீங்க!

சிஅ: எப்படி இப்படி சட்ட அறிவோ, அரசியல் அறிவோ இல்லாம நிருபரா இருக்கீங்க? அது என்னை வாரிசுன்னு அக்கா மறைமுகமா சொன்னது!

நிரு: அப்புறம் ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கினார்?

சிஅ: இப்ப ஒரு உண்மையைச் சொல்றேன்! என்னை பல தடவை ஓய்வெடுத்துக்கச் சொல்லி அக்கா கட்டாயப்படுத்தினாங்க! நான் கேட்காததால கட்டாய ஓய்வு தர ரொம்ப மனவேதனையோட அப்படி செஞ்சாங்க!

நிரு: உங்களுக்கு அரசியல் ஆசை ஏதுமில்லை அப்படின்னு லெட்டர் கொடுத்துத்தானே கட்சியில் திரும்ப சேர்ந்தீங்க?

சிஅ: இப்பவும் எனக்கு ஆசை இல்லை தம்பி! மக்களுக்காகத்தான்!

அப்போது ஏதோ ஒரு வாரிசு வந்து சின்ன அம்மாவிடம் ஏதோ சொல்ல, டென்ஷனோட ஃபோனை எடுத்துப் பேசறார்!
" கவர்னருக்கு எதுக்கு அத்தனை பெரிய வீடு? கங்கை அமரனைவிட அந்த வித்யாசாகர் ராவ் என்ன அவ்வளவு பெரிய ஆளா? கையெழுத்து போடமாட்டாரா?
வெள்ளை குர்தா போட்டுக்கிட்டு அந்தாள் டெல்லில என்ன பண்றாரு? தம்பி ஆசைப்படுது, அந்த அடையாறு பங்களாவை எழுதி வாங்க முடியுமா முடியாதா?
ஒருவேளை அங்க ஏதாவது சேட்டுப்பொண்ண கரெக்ட் பண்ணிட்டாறா? ஒரு மூட்டை கஞ்சா ரெடி பண்ணட்டுமான்னு கேளு!

சிஅ:  நீங்க கேளுங்க தம்பி!

நிரு: இல்லைங்க.. வந்து..

சிஅ:  சும்மா கேளுங்க பயப்படாதீங்க இங்க வெச்செல்லாம் எதுவும் செய்யமாட்டோம்! மகளிர் அணி, ஆட்டோ எல்லாம் வெளியேதான்.

நிரு: ஜெ மரணத்தில் சந்தேகம் இருப்பதாய் சொல்கிறார்களே?

சிஅ:  அத்தனை கோடிப்பேர் பார்த்தார்களே, அவர் மரணமடைந்துவிட்டார். இதிலென்ன சந்தேகம்?

நிரு: இல்லை, அவர் மரணமடைந்த விதத்தில் சந்தேகம் ...

சிஅ:  இதே கேள்வியை நீங்கள் ஸ்டாலினைக் கேட்பீங்களா?
கருணாநிதி இன்னும் மரணமடையாமல் இருக்கிறாரே, அதில் உங்களுக்கு ஏன் சந்தேகம் வரலை?

நிரு: உப்புமா சாப்பிடுகிறார்,பந்து விளையாடுகிறார் என்றெல்லாம் சொன்னீர்களே, இல்லை, அவர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருப்பதுபோல் ஏன் ஒரு புகைப்படத்தை நீங்கள் வெளியிடவில்லை?

சிஅ:  உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது இங்கிதம் இருக்குதா?
ஒரு பெண்மணி படுத்திருப்பது, சாப்பிடுவது, விளையாடுவதெல்லாம் அடுத்தவங்க பார்க்கலாமா? உங்க வீட்டுப் பொண்ணுகளை அப்படிப் படம் எடுத்துப் போடுவீங்களா?

நிரு: சரி, மத்திய அமைச்சர்களை, கவர்னரையாவது பார்க்க அனுமதித்திருக்கலாமே?

சிஅ:  லூசு மாதிரி பேசாத தம்பி, போட்டோவே பார்க்கக்கூடாதுன்னு சொல்றேன்,நேர்ல பார்க்கணுமா?

நிரு: இல்லை, அவர் ட்ரீட்மெண்ட் பற்றிய சந்தேகம் தீர்ந்திருக்குமே?

சிஅ:  ஏன், லண்டனிலிருந்து வந்த பீலா ரிச்சர்டு சொன்னார், ரெட்டி, எத்தனை ஜெராக்ஸ் கொடுத்தார், அதெல்லாம் போதாமல், நானே சொன்னேன். இதற்குமேல் என்ன ஆதாரம் வேணும்?
வேணும்னா போய் அக்காவையே கேளுங்க!

நிரு: சரி, இப்போ உங்களை முதல்வராகச் சொல்லி யார் கேட்டாங்க?

சிஅ: ஏன் தம்பி, நீ பேப்பரே பார்க்கமாட்டியா?
நேத்து,போஸ், தேவரையா, அக்கா, எம்ஜியார் எல்லாரும் வந்து என்கிட்டே கேட்டது போட்டோ வந்ததே?

நிரு: அம்மா, அது வேஷம் போட்டவங்க!

சிஅ: ஏன், சினிமால வேஷம் போட்டவங்கள நம்பி நீங்க ஆட்சியைக் கொடுக்கலையா? இப்போ மட்டும் என்ன புதுசா பேசறீங்க?

நிருதுணை வேந்தர்கள் எதற்கு உங்களை வந்து பார்த்தார்கள்?

சிஅ: எனக்கு அதுதான் தம்பி கோபம்! பழைய சசிகலான்னு நினைச்சுக்கிட்டு துணை வேந்தருங்க வந்துட்டானுக!
நான் இப்போ சிஎம்! போய் வேந்தரை வரச்சொல்லுங்கடான்னு ஓட்டிவிட்டுட்டேன்.

நிரு: அது சரி! உங்க கொள்கை என்ன?இனிமேலாவது அண்ணா வழியில் நடப்பீர்களா?

சிஅ: எங்க அண்ணனுக்கு ஒரு இழவும் தெரியாது! நான்தான் இங்கே எல்லாம்!

நிரு: ஐயோ, நான் அறிஞர் அண்ணாவைச் சொன்னேன்!

சிஅ: அந்த ஆளா? அதுதான் பறக்கவிட்டுட்டோமே கொடியில!

நிரு: சரி,நீங்க தியாக வாழ்வு வாழ்ந்தா சொல்றீங்க! ஆனா எப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்தது?

சிஅ: நான் ஒரு பெண் அதனாலதானே இந்தக்க்கேள்வி கேட்கறீங்க?
இதை அம்பானியைக் கேட்கமுடியுமா? அதானியைக் கேட்கமுடியுமா, இல்லை பில் கேட்ஸை கேட்கமுடியுமா?
அவர்களைவிட பெரிய குடும்பம் என்னோடது! இதில் யாருக்காவது சொந்தமா ஒரு ஏர்போர்ட், ரெயில்வே ஸ்டேஷன் இருக்கா?
இல்ல, சொந்தமா ஒரு ஏரோபிளேன் இருக்கா?
பின்ன ஏன் இப்படி?

நிரு: தீபா உங்களுக்குப் போட்டியா வருவார்ங்கறாங்களே?

சிஅ: ஐயோ, அந்த அம்மா எப்போவோ சினிமாவை விட்டுப் போய்டுச்சுங்க?

நிரு: ஜெயலலிதா அண்ணன் மகள்...

சிஅ: அவங்களுக்கு அண்ணனே இல்லை! அப்புறம் மகள் எங்க?

நிரு: இப்போதைய முதல்வர் என்னாவார்?

சிஅ: யாரு, ஓபியா? அரைக்கிலோ மிக்ஸர் வாங்கிக் கொடுத்து ஓரமா உட்காரவைச்சிடுவோம்!

நிரு: சரி, பதவி ஏற்றதும் மதுவிலக்கு கொண்டுவருவீங்கன்னு சொல்றாங்களே?

சிஅ: போங்கதம்பி! வாயில நல்லா வருது! அப்புறம் மிடாஸ்ல சத்துணவா தயாரிக்கமுடியும்? 

நிரு: சொத்துக்குவிப்பு வழக்கு என்னாகும்?

சிஅ: முதல் குற்றவாளி செத்துப்போனதுக்கப்புறம் வழக்கு ரத்து ஆகிடும்

நிரு: யார் சொன்னாங்க மேடம்?

சிஅ: மாமாவே சொன்னாரு!

அப்ப சரி!